குவைத் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் தனது ஐந்தாவது இரத்த தான முகாமை பிப்ரவரி 18ம் தேதியன்று ஒரு பெரும் சாதனையோடு நடத்தி முடித்திருக்கிறது. குவைத் ரத்த வங்கி துவங்கியது முதல் இன்று வரை ஒரே நாளில் ஒரே அமைப்பை சேர்ந்த எவரும் இத்தனை எண்ணிக்கையில் ரத்தம் கொடுத்தது இல்லை என்பதே அந்த சாதனை. மதியம் ஒரு மணி முதல் ஏழு மணி வரை நடந்த முகாமில் பெண்கள் மற்றும் 20 முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் உட்பட 540 பேர் வருகைத் தந்தாலும் 330 பேர் வரை தான் பதிவு செய்யவே முடிந்தது. அந்த 330 பேரிலும் இரவு ஏழு மணிவரை 284 பேர் மட்டுமே ரத்தம் கொடுக்க முடிந்தது. மற்றவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பியது வருத்தம் அளித்தாலும் இவ்வளவு எண்ணிக்கையில் சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டதும் குவைத் மத்திய இரத்த வங்கியில் இத்தனை பேர் ஒரே நாளில் இரத்தம் வழங்கியது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்று சந்தோசத்தோடு அதன் ஊழியர்கள் சகோதரி நபியா சாஹர், ஆயிஷா அஹமத், அன்வர் அல் உமிசாத் நம்மோடு பகிர்ந்துக் கொண்டதும் நம்மை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.நிகழ்ச்சி ஏற்பாட்டை மண்டல நிர்வாகத்தின் கீழ் மண்டல மருத்துவ அணி பொறுப்பாளர் சகோ முஹம்மது சித்திக்கின் தலைமையில் சகோதரர்கள் ஹாஜா, அப்பாஸ்,சர்புதீன்,ஜியாவுதீன்,ரியாஸ்,சாகுல் ஹமீத் மற்றும் நம் கிளை சகோதரர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தினர்.
0 comments:
Post a Comment