துபாய்: துபாயில் இளையான்குடி வட்டார ஜமாஅத்தினரின் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற்றது. வாவணன் முஹம்மது முக்தார் இறைவசனங்களை ஓதினார். அப்துல் பாசித் வரவேற்றார். அப்துல் காதர் தலைமையுரை நிகழ்த்தினார். பறக்கத்தாபாத் மஸ்ஜித் தாருஸ் ஸலாம் இமாம் மௌலவி ஏ.ஹெச். அப்துல் ஹக்கீம் ஆலிம் ஜமாலி, அஹமது கபீர், துபாய் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழக துணைத்தலைவர் கொடுங்கையூர் எம்.முஹைதீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.<BR>அடமங்குடி அப்துல் ரஹ்மான் தீனிசைப் பாடல் பாடினார். பஷீர் அஹமது, அப்தாஹிர், சுல்தான், பைசல், அமானுல்ல்லாஹ் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். ஊர் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வினை அப்துல் நாசர் தொகுத்து வழங்கினார். பெண்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பான மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri : www.dinamalar.com
0 comments:
Post a Comment