Saturday, February 5, 2011
அபுதாபியில் உள்ள 'அபுதாபி நண்பர்கள் குழு' சார்பில் 2011 புது வருட கொண்டாட்டம்
9:44 AM
வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்
No comments
அபுதாபி : அபுதாபியில் உள்ள 'அபுதாபி நண்பர்கள் குழு' சார்பில் 2011 புது வருட கொண்டாட்டம், குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் அபுதாபி நண்பர்கள் குழு குடும்ப விழா என மூப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. ஜனவரி 28ம் தேதியன்று இனிய மாலை பொழுதில் அபுதாபி நண்பர்கள் குழுவின் ‘இனிய இதயங்கள் சங்கமம் 2011’ நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. அமைப்பின் பொறுப்பாளர்கள் கிருஷ்ணா, சிதம்பரநாதன், சுனில், ஸ்ரீராம் ஆகியோர் குத்து விளக்கை ஏற்றி வைக்க தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தியாகராஜா வாழ்த்துரை வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு அபுதாபி நண்பர்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சிறப்பித்தனர். குழந்தைகள், ஆடவரின் நடனங்கள் மற்றும் பாடல்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு 'செம்மொழியான தமிழ்மொழியம்' பாடலுக்கு குழந்தைகள் நடனம் ஆடி தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தினர். வெளிநாட்டிற்கு பணம் சம்பாதிக்க செல்லும் இந்தியர்களுக்கு நமது பாரத மாதாவின் வேதனையை எடுத்துரைக்கும் விதமாக கிருஷ்ணாவின் மௌன நாடகம் அரங்கேற்றபட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.
ஆடவர் மற்றும் பெண்களின் கருத்து மிகுந்த நாடகங்கள் மற்றும் பட்டிமன்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை இரவு விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள ஒரு கண் பார்வையற்ற குழந்தைகள் பள்ளிக்கு நன்கொடை வசூல் செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் அபுதாபி நண்பர்கள் குழுவின் வளர்ச்சிக்கு பணியாற்றிய அனைவரையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் கலந்து கொண்டு சிறப்பித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நண்பர்கள் குழுவினர் சிறப்பாக கவனித்து கொண்டனர். விழாவினை ஆனந்த் அண்ணாமலை மற்றும் ஆனந்த்குமார் ஆகியோர் அருமையாக தொகுத்து வழங்கினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவின் முடிவில் நமது இந்திய தேசிய கீதம் முழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
0 comments:
Post a Comment