துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெண்கள் தின விழா பிப்ரவரி 25ம் தேதியன்று மாலை ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தெரிவித்துள்ளார். பெண்கள் தின விழாவையொட்டி சமையல், ரங்கோலி, ஹென்னா, கலைநயமிக்க பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்பட இருக்கிறது.
மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்காக ஓவியப்போட்டி மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகியனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் வெள்ளிக்கிழமை மாலை 3.30 க்குள் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 050 2118775 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
0 comments:
Post a Comment