அபுதாபி : அபுதாபியில் ஜனவரி 21ம் தேதியன்று 'பாரதி நட்புக்காக' அமைப்பின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
ஆஷா நாயர் குழுவினரின் இரண்டு நடனங்கள் நடந்தது. அதில் அந்தக் காலத்தில் கொண்டாடியப் பொங்கல் மற்றும் இந்த அவசர யுகத்தில் கொண்டாடும் பொங்கல் என வித்தியாசமாக அமைத்திருந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பின்னர் நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் 'மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்திற்கு முன்பா... திருமணத்திற்கு பின்பா...'என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது.
இதில் மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்னவென்றால் என்றுமே மழைப்பெய்யாத அபுதாபி நகரத்தில் அன்றைய தினம் காலையிலிருந்து இரவு வரை மழை கொட்டித் தீர்த்தது.அந்த அடாத மழையிலும் நம்மக்கள் பெருந்திரளாக வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தது 'பாரதி நட்புக்காக' அமைப்பின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையே என்பது மிகவும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.
நம்மக்களின் நம்பிக்கைக்கு சிறிதும் பங்கம் வராமல் 'பாரதி நட்புக்காக' அமைப்பினர்கள் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தினார்கள்.அதிலும் நம் நகைச்சுவைத் தென்றல் லியோனியின் நகைச்சுவைக் கலந்தப்பேச்சால் அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.அன்றையப்பொழுது வெளியில் மழையையும்,அரங்கத்திற்குள் சிரிப்புமழையையும் கொண்டப் பொழுதாக அமீரகம் வாழ மக்களுக்கு மனதில் சந்தோசம் தரும் இனிய நாளாக அமைந்தது
Nandri : ரமேஷ் விஸ்வநாதன் and www.dinamalar.com
VISIT OUR BLOG
FOR REGULAR UPDATES HTTP://GULFTAMILNANBARKAL.BLOGSPOT.COM
0 comments:
Post a Comment