Google Plus LinkedIn Email

Thursday, February 3, 2011

குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஜனவரி 21ம் தேதியன்று பொங்கல் திருநாள்


குவைத் : குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஜனவரி 21ம் தேதியன்று பொங்கல் திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 1200 இந்தியர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்ட இவ்விழாவில் குவைத்திற்கான இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பொங்கல் விழா கொண்டாடட்டத்தின் ஒரு பகுதியாக குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குவைத் தமிழ்ச் சங்கத்தின் 5வது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது, விழாவின் உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

சுமார் 3 மணிநேரம் இடைவிடாது இசை விருந்தளித்த இன்னிசை நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அமைந்த திரையிசைப் பாடல்களும், அவற்றிற்கு நடனங்களும் இடம்பெற்றன. சென்னையிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட சுசித்ரா கார்த்திக்கின் இசை கச்சேரி அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. நீலிமா மற்றும் பூர்ணிமா சகோதரிகள் இனிய குரலில் பாடி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர். சென்னையில் இருந்து வந்த சின்னத்திரை கலைஞர்கள் ராஜ்குமார், பிரியதர்ஷினி, சுரேஷ்வர் உள்ளிட்ட கலைஞர்கள் வழங்கிய நடனங்களும், பாடல்களும் பார்வையாளர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.
- தினமலர் வாசகர் எஸ்.செல்லத்துரை

1 comments:

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் said...

THANGAL KARUTHUKKALAI ANUPPUNGAL.

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons